 |
இந்தியாவில் அறிமுகமாகிறது ஆடி நிறுவனத்தின் ஆர்8 ரக ஸ்போர்ட்ஸ் கார்
பிரபல ஜெர்மன் சொகுசு கார் தயாரிப்பாளரான ஆடி கார் நிறுவனம், அதன் புதிய ஸ்போர்ட்ஸ் காரான ஆர் 8 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. அக்டோபர் - நவம்பரில் இந்த கார் இங்கு அறிமுகம் செய்யப்படும் என்று ஆடி நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். நாங்கள் அக்டோபர் - நவம்பரில் எங்களது ஆர் 8 ரக கார்களை இங்கு அறிமுகப்படுத்த இருக்கிறோம். எங்களிடம் ஏற்கனவே இந்த காருக்கான ஆர்டர் வந்து விட்டது என்று ஆடி இந்தியாவின் வைஸ் - பிரசிடென்ட் மார்க்கெட்டிங் மார்ட்டின் பிர்க்னர் தெரிவித்தார். ஆடி நிறுவனம் 2007 காலண்டர் ஆண்டில் 350 கார்களை இந்தியாவில் விற்பனை செய்திருக்கிறது. இதில் அதிகமாக, கடந்த மாதம் அறிமுகப்படுத்திய ஏ4 மாடல் செடன் கார்கள்தான் விற்பனை ஆகி இருக்கிறது. இந்த வருடத்தில் அவர்கள் 1000 கார்களை இங்கு விற்க இலக்கு வைத்திருக்கிறார்கள். இந்தியாவில் ஆடியின் ஏ8, க்யு7, ஏ6, ஏ4 மற்றும் டிடி மாடல்கள் கிடைக்கின்றன. அவ்ரங்காபாத்தில் இருக்கும் இவர்களது அசம்ளி பிளான்ட்டில் தான் ஏ6 மாடல் கார்களை அசம்பிள் செய்யப்படுகிறது. இப்போது ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்து இங்கு விற்றுக்கொண்டிருக்கும் ஏ4 மாடல் கார்களையும் வரும் அக்டோபரில் இருந்து இங்குதான் அசம்பிள் செய்ய இருக்கிறார்கள். ஏ4 மாடல் கார்கள் ரூ.29 லட்சம் விலையில் ( எக்ஸ் ஷோரூம் - மும்பை ) இருக்கிறது.
________________________________________________________________________________________________________
ஒரு இலட்சம் ரூபாவில் ஒரு கார்
உலகத்திலே பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்திய நிறுவனமாகிய டாடா நிறுவனத்தின் ரூ.1 லட்சம் காராகிய "டாடா நானோவை" டாடா நிறுவன அதிபர் ரத்தன் டாடா இன்று அறிமுகப்படுத்தினார்.
டெல்லியில் இன்று துவங்கிய ஆட்டோ எஸ்போ என்ற வாகன வர்த்தக கண்காட்சியில் டாடாவின் நானோ கார் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்திய தொழில் துறையின் முன்னணி நிறுவனமான டாடா மோட்டார்ஸ் உலகத்திலேயே மலிவு விலை காரை அறிமுகப்படுத்தி எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
இதை அறிமுகப்படுத்தி ரத்தன் டாடா பேசுகையில்இ நான்கு வருடங்களுக்கு முன்பு மலிவு விலை கார் தயாரிப்பு திட்டத்தில் இறங்கினோம். அப்போது ரூ.1 லட்சத்தில் காரை அறிமுகப்படுத்துவோம் என்று உறுதி மொழி அளித்தோம். கடந்த நான்கு வருடங்களில் கார் தயாரிக்க தேவையான பல பொருட்களின் விலை அதிகரித்து உள்ளது. ஆனால் நாங்கள் முன்பு கூறிய உறுதி மொழியின் படி ரூ.1 லட்சத்தில் காரை அறிமுகப்படுத்தி உள்ளோம் என்று கூறினார். இக்கார் செப்டம்பர் மாதமளவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் விற்பனை விலை ரூ.1 லட்சம; (2500 அமெரிக்டொலர் அல்லது 1277 ஸ்ரேலங் பவுண்ஸ்) இந்திய ரூபா என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
|  |
|